Skip to content

Popular

Kamarajar Ponmolikal

காமராஜர் பொன்மொழிகள்-Kamarajar Ponmolikal in Tamil

18 quotes · page 1 / 2

காமராஜர் பொன்மொழிகள் பற்றி · About

காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கியத் தலைவராகவும் விளங்கியவர். ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்த கல்விப் பணிகளுக்காக மக்களால் 'கல்விக் கண் திறந்தவர்' என்று இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கல்வியின் மேன்மை, எளிமை, நேர்மையான உழைப்பு, சமூக சமத்துவம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. கல்வி தொடர்பான நிகழ்வுகளிலும் அவரது நினைவு நாட்களிலும் வாசகர்கள் இவற்றை விரும்பிப் பகிர்கின்றனர்.

Sayings of K. Kamaraj, the former Chief Minister of Tamil Nadu and Congress leader remembered for bringing schooling to poor children. His words speak of education, simplicity, honest work and social equality.

காமராஜர் பொன்மொழிகள் · 18 Kamarajar quotes

அதிகம் படித்தவை · Most read Kamarajar quotes

  1. 1 எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும். 👁 5
  2. 2 நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. 👁 5
  3. 3 உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் மட்டுமே சொத்து சேர்த்துவை. இல்லையென்றால் சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே! 👁 5
  4. 4 பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். 👁 5
  5. 5 அளவுக்கு அதிகமாகப் பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ அதே போல் குறைவாகப் பேசுவதும் தீமையே. 👁 4