Skip to content

Popular

Periyar Ponmolikal

பெரியார் பொன்மொழிகள்-Periyar Ponmolikal in Tamil

87 quotes · page 1 / 9

பெரியார் பொன்மொழிகள் பற்றி · About

தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்தவாதி; சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி சாதி ஏற்றத்தாழ்வுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது பொன்மொழிகள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. சிந்தித்துச் செயல்படும் பண்பைப் பற்றிப் பேச விரும்பும்போது வாசகர்கள் இவற்றைப் பகிர்கிறார்கள்.

Sayings of Periyar E. V. Ramasamy, the Tamil social reformer who founded the Self-Respect Movement. His words stress rational thinking, self-respect, equality and women's rights.

பெரியார் பொன்மொழிகள் · 87 Periyar quotes

அதிகம் படித்தவை · Most read Periyar quotes

  1. 1 கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும். 👁 21
  2. 2 மற்றவர்களின் ஆதிக்கத்திலோ, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக மாற்றுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். 👁 5
  3. 3 மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம். 👁 5
  4. 4 இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும். 👁 4
  5. 5 சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை. 👁 4