Skip to content

Popular

November 10 செவ்வாய்

இன்று · Today · November 10

வரலாற்றில் இன்று: நவம்பர் 10

நவம்பர் 10 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 24 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1

இன்று · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

13ஆம் நூற்றாண்டு

  1. 1202

    நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.

  2. 1293

    ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1444

    அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1580

    மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1659

    பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.

  2. 1674

    மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1775

    ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1847

    110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.

  2. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.

  3. 1871

    காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.

  2. 1940

    உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

  3. 1944

    அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.

  4. 1945

    சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

  5. 1970

    வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.

  6. 1970

    சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.

  7. 1971

    கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.

  8. 1972

    அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.

  9. 1975

    729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.

  10. 1975

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.

  11. 1979

    வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.

  12. 1983

    விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.

  13. 1989

    பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

  14. 1989

    செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.

  15. 1993

    தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.

  16. 1995

    நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.

  17. 1999

    பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

  2. 2008

    செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

பிறப்புகள்

Births · 24

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.