Skip to content

Popular

November 14 சனி

On this day · November 14

வரலாற்றில் நவம்பர் 14

நவம்பர் 14 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 21 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 2

நவம்பர் 14 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

16ஆம் நூற்றாண்டு

  1. 1579

    "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1708

    கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1751

    இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார்.

  2. 1886

    பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.

  3. 1889

    நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.

  2. 1922

    பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

  3. 1940

    இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.

  6. 1943

    இந்திய-இலங்கை விரைவுத் தொடருந்து சென்னையில் இருந்து 100 மைல் தூரத்தில் சேந்தனூர் என்ற இடத்தில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

  7. 1963

    ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

  8. 1965

    வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.

  9. 1967

    அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

  10. 1969

    அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

  11. 1970

    சோவியத் ஒன்றியம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பில் இணைந்தது.

  12. 1970

    மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.

  13. 1971

    மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

  14. 1973

    கிரேக்க இராணுவ ஆட்சிக்கு (1667-74) எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் கிரேக்கத்தில் ஆரம்பமானது.

  15. 1975

    மேற்கு சகாராவை விட்டு எசுப்பானியா விலகியது.

  16. 1978

    பிரான்சு ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.

  17. 1982

    போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

  18. 1990

    கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

  19. 1991

    நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.

  20. 1996

    தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    ஆப்கானித்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

  2. 2003

    90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

  3. 2016

    நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

  4. 2024

    இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024: அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் இடதுசாரி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.