Skip to content

Popular

November 1 ஞாயிறு

On this day · November 1

வரலாற்றில் நவம்பர் 1

நவம்பர் 1 அன்று நிகழ்ந்த 83 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 49 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 6

நவம்பர் 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 49

11ஆம் நூற்றாண்டு

  1. 1009

    பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.

12ஆம் நூற்றாண்டு

  1. 1179

    இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1503

    இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

  2. 1512

    மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.

  3. 1520

    தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது.

  4. 1570

    டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1604

    சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.

  2. 1611

    சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.

  3. 1612

    போலந்துப் படைகள் மாஸ்கோ, கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.

  4. 1688

    மாண்புமிகு புரட்சி: இரண்டாம் யேம்சிடம் இருந்து பிரித்தானியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூன்றாம் வில்லியம் இரண்டாவது தடவையாக நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1755

    போர்த்துகல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1765

    பிரித்தானிய நாடாளுமன்றம் வட அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு 13 குடியேற்ற நாடுகளில் முத்திரை வரியை அறிமுகப்படுத்தியது.

  3. 1800

    வெள்ளை மாளிகையில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1805

    நெப்போலியன் பொனபார்ட் ஆத்திரியாவை முற்றுகையிட்டான்.

  2. 1814

    நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் பிரான்சு தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.

  3. 1864

    இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் மசூலிப்பட்டணத்தில் இடம்பெற்ற சூறாவளியினல் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

  4. 1876

    நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.

  5. 1894

    மூன்றாம் அலெக்சாந்தர் இறந்ததை அடுத்து, அவரது மகன் இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசராக முடிசூடினார்.

  6. 1897

    அமெரிக்கக் காங்கிரசு நூலகம் முதற்தடவையாக பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1904

    கொழும்பிலிருந்தான இலங்கையின் வடக்குத் தொடருந்துப் பாதை அநுராதபுரம் வரை அமைக்கப்பட்டு சேவை ஆரம்பமானது.

  2. 1911

    இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. இத்தாலிய விமானம் லிபியா மீது குண்டுகளை வீசியது.

  3. 1914

    முதலாம் உலகப் போர்: சிலியில் செருமனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.

  4. 1918

    நியூயோர்க் நகரின் புரூக்ளினில் இடம்பெற்ற விரைவுப் போக்குவரத்து விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.

  5. 1918

    மேற்கு உக்ரைன் ஆத்திரியா-அங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.

  6. 1922

    உதுமானியப் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.

  7. 1928

    துருக்கிய மொழி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.

  8. 1937

    அசர்பைசானில் இசுத்தாலினியர்கள் இலூதரனிய சமூகத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைப் படுகொலை செய்தனர்.

  9. 1943

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை சொலமன் தீவுகளில் தரையிறங்கியது.

  10. 1948

    சீனாவின் தெற்கு மஞ்சூரியாவில் சீன சரக்குக் கப்பல் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் உயிரிழந்தனர்.

  11. 1950

    புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி டுரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

  12. 1951

    நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

  13. 1952

    அமெரிக்கா ஐவி மைக் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

  14. 1954

    புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

  15. 1955

    வியட்நாம் போர் ஆரம்பமானது.

  16. 1955

    கொலராடோவில் விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

  17. 1956

    அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரி நடுநிலைமையை அறிவித்து வார்சா உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சோவியத் இராணுவம் அங்கேரியினுள் மீண்டும் உட்புகுந்தது.

  18. 1956

    இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.

  19. 1957

    அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மெக்கினாக் பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

  20. 1963

    புவேர்ட்டோ ரிக்கோ, அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் உலகின் மிகப்பெரும் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

  21. 1970

    பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர்.

  22. 1973

    மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.

  23. 1979

    பொலிவியாவில், இராணுவத் தளபதி அல்பெர்ட்டோ நாத்துசு அரசுக்கு எதிரான இராணுவப் புரட்சியை நடத்தினார்.

  24. 1981

    ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.

  25. 1984

    இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, இந்தியாவில் சீக்கியருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.

  26. 1993

    ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

  27. 1999

    ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.

  28. 2000

    செர்பியாவும் மொண்டெனேகுரோவும் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

  2. 2012

    சவூதித் தலைநகர் ரியாதில் எண்ணெய்த் தாங்கி ஒன்று வெடித்ததில் 26 பேர் உயிரிழந்தனர், 135 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.