Skip to content

Popular

November 24 செவ்வாய்

On this day · November 24

வரலாற்றில் நவம்பர் 24

நவம்பர் 24 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 14 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2

நவம்பர் 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

4ஆம் நூற்றாண்டு

  1. 380

    உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1227

    போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1359

    முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1639

    ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

  2. 1642

    ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1750

    மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..

19ஆம் நூற்றாண்டு

  1. 1859

    சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.

  2. 1865

    இலங்கையில் கொழும்பு, கண்டி மாநகரசபைகள் அமைக்கப்பட்டன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1914

    முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

  2. 1917

    அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 1922

    துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

  4. 1940

    இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.

  7. 1963

    அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.

  8. 1965

    யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

  9. 1966

    செக்கோசிலோவாக்கியாவில் பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.

  10. 1969

    சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

  11. 1971

    வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

  12. 1973

    1973 எண்ணெய் நெருக்கடியை அடுத்து செருமனியில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இது அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருந்தது.

  13. 1976

    துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  14. 1992

    யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

  2. 2006

    சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

  3. 2012

    டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்.

  4. 2015

    உருசியாவின் சுகோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.

  5. 2016

    கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

  6. 2017

    பிர் அல்-அபெட் தாக்குதல்: எகிப்தில் பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளிவாசலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.