Skip to content

Popular

November 27 வெள்ளி

On this day · November 27

வரலாற்றில் நவம்பர் 27

நவம்பர் 27 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 17 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

நவம்பர் 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 26

1ஆம் நூற்றாண்டு

  1. 25

    இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

7ஆம் நூற்றாண்டு

  1. 602

    பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1095

    திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1703

    இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1830

    அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.

  2. 1895

    ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் உதுமானியர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

  3. 1895

    பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.

  2. 1935

    கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.

  3. 1940

    உருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.

  4. 1944

    இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

  5. 1964

    பனிப்போர்: இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் உருசியாவையும் கேட்டுக் கொண்டார்.

  6. 1971

    சோவியத்தின் "மார்ஸ் 2" விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.

  7. 1975

    கின்னசு உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  8. 1978

    துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) ஆரம்பிக்கப்பட்டது.

  9. 1983

    கொலம்பியாவின் போயிங் 747 விமானம் எசுப்பானியா தலைநகர் மத்ரிதில் வீழ்ந்து நொருங்கியதில் 181 பேர் உயிரிழந்தனர்.

  10. 1989

    போயிங் 727 வானூர்தி கொலம்பியாவின் நடுவானில் வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 107 பேரும், தரையில் மூவரும் கொல்லப்பட்டனர்.

  11. 1989

    ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

  12. 1997

    அல்சீரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

  2. 2004

    யோவான் கிறிசோஸ்தோம் புனிதரின் எச்சங்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கிழக்கு மரபுவழி திருச்சபையிடம் ஒப்படைத்தார்.

  3. 2005

    பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.

  4. 2006

    கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

  5. 2007

    ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.

  6. 2007

    ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

  7. 2009

    மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.