Skip to content

Popular

November 28 சனி

On this day · November 28

வரலாற்றில் நவம்பர் 28

நவம்பர் 28 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 19 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 5

நவம்பர் 28 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 36

16ஆம் நூற்றாண்டு

  1. 1520

    தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1660

    கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.

  2. 1821

    பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.

  3. 1843

    அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.

  4. 1848

    மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

  5. 1885

    செர்பிய-பல்கேரியப் போரில் பல்கேரியா வென்றது.

  6. 1893

    நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.

  7. 1899

    இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    அயர்லாந்து தேசியவாதி ஆர்தர் கிறிஃபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் பெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.

  2. 1908

    பென்சில்வேனியாவின் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 154 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

  3. 1912

    அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  4. 1920

    அயர்லாந்து விடுதலைப் போர்: ஐரியக் குடியரசு இராணுவத்தினர் பிரித்தானியப் படை முகாம் ஒன்றைத் தாக்கி 17 பேரைக் கொன்றனர்.

  5. 1942

    அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

  8. 1958

    சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

  9. 1960

    மூரித்தானியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

  10. 1964

    நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.

  11. 1965

    வியட்நாம் போர்: தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.

  12. 1966

    மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.

  13. 1967

    வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.

  14. 1971

    ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார்.

  15. 1972

    பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

  16. 1975

    கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  17. 1979

    நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் உயிரிழந்தனர்.

  18. 1980

    ஈரான் – ஈராக் போர்: மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது.

  19. 1987

    தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.

  20. 1989

    பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

  21. 1990

    ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

  22. 1990

    லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.

  23. 1991

    தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  24. 1994

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

  2. 2014

    நைஜீரியாவின் கனோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2016

    கொலம்பியாவின் மெதெயின் நகருக்கு அருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.