Skip to content

Popular

November 20 வெள்ளி

On this day · November 20

வரலாற்றில் நவம்பர் 20

நவம்பர் 20 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 24 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 3

நவம்பர் 20 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

3ஆம் நூற்றாண்டு

  1. 284

    டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1194

    புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1658

    இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1776

    அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது.

  2. 1789

    நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1820

    தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1910

    பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.

  2. 1923

    செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)

  3. 1936

    எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.

  4. 1940

    இரண்டாம் உலகப் போர்: அங்கேரி அச்சு நாடுகள் அமைப்பில் இணைந்தது.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் கில்பர்ட் தீவுகளில் தரவா நகரில் தரையிறங்கியதில், அங்கிருந்த சப்பானியப் படைகளினால் பெரும் தாக்குதலுக்குள்ளானர்கள்.

  6. 1945

    நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.

  7. 1947

    இளவரசி எலிசபெத் - இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.

  8. 1959

    குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  9. 1962

    சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.

  10. 1968

    மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 78 தொழிலாளர்கள் இறந்தனர்.

  11. 1969

    வியட்நாம் போர்: வியட்நாமில் இடம்பெற்ற மை லாய் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை பிளெயின் டீலர் என்ற பத்திரிகை வெளியிட்டது.

  12. 1969

    அமெரிக்கப் பழங்குடி செயற்பாட்டாளர்கள் அல்காட்ராசு தீவை ஆக்கிரமித்தனர். இத்தீவைப் பின்னர் அமெரிக்க அரசு 1971 சூன் 11 இல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

  13. 1977

    எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுரேலியப் பிரதமர் மெனசெம் பெகின் உடன் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

  14. 1977

    ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.

  15. 1979

    பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்: சவூதி அரேபியா, மெக்காவில் கஃபா மசூதியைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

  16. 1985

    மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

  17. 1988

    ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

  18. 1991

    19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

  19. 1992

    இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பெரும்சேதம் ஏற்பட்டது.

  20. 1993

    மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

  21. 1994

    அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.

  22. 1996

    ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்தனர், 81 பேர் காயமடைந்தனர்.

  23. 1998

    பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

  24. 1999

    இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டனர், 64 பேர் காயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2015

    மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 24

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.