Skip to content

Popular

November 21 சனி

On this day · November 21

வரலாற்றில் நவம்பர் 21

நவம்பர் 21 அன்று நிகழ்ந்த 50 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 8 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 3

நவம்பர் 21 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 164

    மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

3ஆம் நூற்றாண்டு

  1. 235

    போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1386

    சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1676

    தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1789

    வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1877

    ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.

  2. 1894

    முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.

  2. 1916

    முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் பிரித்தானிக் கப்பல் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 1918

    உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர்.

  4. 1920

    டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 அயர்லாந்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  5. 1942

    அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க நீர்மூழ்கி சீலயன் சப்பானியப் போர்க் கப்பல்கள் கொங்கோ, உராக்கேசு மூழ்கடிக்கப்பட்டன.

  7. 1947

    இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

  8. 1950

    வடகிழக்கு பிரிட்டிசு கொலம்பியாவில் இரண்டு கனடியத் தொடருந்துகள் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் கனடிய இராணுவத்தினர் ஆவார்.

  9. 1962

    சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.

  10. 1963

    இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

  11. 1969

    முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

  12. 1969

    ஓக்கினாவா தீவை 1972 இல் சப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.

  13. 1971

    வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி வாகினியின் உதவியுடன் இந்தியப் படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாக்கித்தான் படைகளைத் தோற்கடித்தன.

  14. 1974

    பேர்மிங்காமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

  15. 1980

    தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.

  16. 1980

    நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.

  17. 1990

    புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.

  18. 1990

    மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

  19. 1996

    புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.

  2. 2009

    சீனாவில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்தனர்.

  3. 2013

    லாத்வியா, ரீகா நகரில் வணிகத் தொகுதி ஒன்றின் கூரை இடிந்து விழ்ந்ததில் 54 பேர் உயிரிழந்தனர்.

  4. 2013

    உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் உக்ரைனிய-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை இடைநிறுத்தியதை அடுத்து, அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

  5. 2017

    37 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் ராபர்ட் முகாபே சிம்பாப்வே அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பிறப்புகள்

Births · 8

இறப்புகள்

Deaths · 8

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.