Skip to content

Popular

November 3 செவ்வாய்

On this day · November 3

வரலாற்றில் நவம்பர் 3

நவம்பர் 3 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 15 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 6

நவம்பர் 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

4ஆம் நூற்றாண்டு

  1. 361

    உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 644

    இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1333

    ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1492

    இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

  2. 1493

    கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1534

    இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1783

    அமெரிக்க விடுதலைப் படை கலைக்கப்பட்டது.

  2. 1789

    அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.

  3. 1793

    பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கூசு தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1812

    நெப்போலியனின் இராணுவத்தினர் வியாசுமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

  2. 1838

    பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

  3. 1848

    நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

  2. 1905

    உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார்.

  3. 1918

    செருமனி கடற்படையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 மாலுமிகள் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

  4. 1930

    பிரேசிலில் அக்டோபர் 24 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கெட்டூலியோ வார்கசு இடைக்கால அரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

  5. 1936

    பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வில்லெம்சாவென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

  7. 1956

    சூயெசு நெருக்கடி: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எகிப்தியக் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் தாக்குதல் நடத்தியதில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

  8. 1956

    அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.

  9. 1957

    இசுப்புட்னிக் திட்டம்: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

  10. 1963

    தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.

  11. 1963

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

  12. 1964

    வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

  13. 1973

    மரைனர் திட்டம்: நாசா மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் புதனை அடைந்து அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் பெற்றது.

  14. 1975

    சேக் முசிபுர் ரகுமானின் ஆதரவாளர்கள் உட்படப் பல வங்காளதேச அரசியல்வாதிகள் டாக்கா மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

  15. 1978

    டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

  16. 1979

    அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  17. 1982

    ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  18. 1986

    மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

  19. 1988

    இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் மாலை தீவுகள் அரசைக் கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

  20. 1997

    மனித உரிமை மீறல்களுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2014

    1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.