Skip to content

Popular

November 30 திங்கள்

On this day · November 30

வரலாற்றில் நவம்பர் 30

நவம்பர் 30 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 33 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4

நவம்பர் 30 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 26

10ஆம் நூற்றாண்டு

  1. 977

    புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1700

    சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1718

    நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.

  2. 1782

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

  3. 1786

    புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1803

    லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.

  3. 1806

    நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.

  4. 1853

    கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.

  5. 1872

    முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1908

    பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 1917

    முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.

  3. 1936

    இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.

  4. 1939

    பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.

  5. 1947

    பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.

  6. 1954

    அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

  7. 1962

    பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.

  8. 1966

    ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.

  9. 1967

    ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.

  10. 1967

    சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

  11. 1971

    ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.

  12. 1981

    பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

  13. 1995

    அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் "நேற்றைய மனிதர்" எனக் கூறினார்.

  14. 1995

    வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

  15. 2000

    நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2012

    கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 33

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.