Skip to content

Popular

December 1 செவ்வாய்

On this day · December 1

வரலாற்றில் திசம்பர் 1

திசம்பர் 1 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 10 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 4

திசம்பர் 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

8ஆம் நூற்றாண்டு

  1. 800

    வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1420

    இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1768

    அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1822

    முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார்.

  2. 1828

    அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான்.

  3. 1834

    தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது.

  4. 1875

    வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1913

    தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.

  2. 1913

    முதலாவது பால்கான் போரை அடுத்து துருக்கியிடம் இருந்து சுயாட்சி உரிமை பெற்ற பெற்ற கிரீட் கிரேக்கத்துடன் இணைந்தது.

  3. 1918

    திரான்சில்வேனியா உருமேனியாவுடன் இணைந்தது.

  4. 1918

    ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

  5. 1918

    சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

  6. 1924

    எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

  7. 1934

    சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். யோசப் ஸ்டாலின் இந்நிகழ்வைப் பயன்படுத்தி பெரும் துப்புரவாக்கத்தை ஆரம்பித்தார்.

  8. 1941

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசர் இறோகித்தோ அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.

  9. 1958

    மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரெஞ்சு ஒன்றியத்தினுள் சுயாட்சி பெற்றது.

  10. 1958

    சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.

  11. 1959

    பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

  12. 1960

    கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

  13. 1961

    இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

  14. 1963

    நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

  15. 1965

    இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

  16. 1971

    கெமர் ரூச் போராளிகள் கம்போடிய அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.

  17. 1971

    இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

  18. 1973

    பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

  19. 1974

    அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

  20. 1974

    ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வடமேற்கே போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

  21. 1981

    யுகோசுலாவியாவின் வானூர்தி ஒன்று கோர்சிகாவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் உயிரிழந்தனர்.

  22. 1988

    உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது.

  23. 1989

    பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

  24. 1989

    பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.

  25. 1991

    பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

  26. 1997

    இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ரன்வீர் சேனா அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 தலித்துகளைக் கொன்றனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

பிறப்புகள்

Births · 10

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.