Skip to content

Popular

December 27 ஞாயிறு

On this day · December 27

வரலாற்றில் திசம்பர் 27

திசம்பர் 27 அன்று நிகழ்ந்த 48 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 10 இறப்புகள் · 9

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

1ஆம் நூற்றாண்டு

  1. 36

    பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.

6ஆம் நூற்றாண்டு

  1. 537

    துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1703

    இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.

  2. 1831

    சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

  3. 1836

    இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் உயிரிழந்தனர்.

  4. 1845

    பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

  5. 1864

    இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.

  2. 1915

    யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் "நகுலேசுவரா நூல்நிலையம்" கீரிமலையில் திறக்கப்பட்டது.

  3. 1918

    செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

  4. 1922

    உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.

  5. 1939

    துருக்கியில் ஏர்சின்கன் நகரில் 7.8 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,700 பேர் உயிரிழந்தனர்.

  6. 1945

    29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.

  7. 1949

    இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

  8. 1956

    தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

  9. 1966

    உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

  10. 1968

    சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.

  11. 1978

    எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் சனநாயக நாடானது.

  12. 1979

    சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

  13. 1985

    உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

  14. 1989

    உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது.

  15. 1996

    தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

  16. 1997

    வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  17. 2000

    யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.

  2. 2004

    எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.

  3. 2007

    பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

  4. 2008

    இசுரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.

பிறப்புகள்

Births · 10

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.