Skip to content

Popular

December 6 ஞாயிறு

On this day · December 6

வரலாற்றில் திசம்பர் 6

திசம்பர் 6 அன்று நிகழ்ந்த 54 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 11 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

10ஆம் நூற்றாண்டு

  1. 963

    எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1060

    முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr.

13ஆம் நூற்றாண்டு

  1. 1240

    உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1704

    முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.

  2. 1768

    பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

  3. 1790

    ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1857

    இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.

  2. 1877

    தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.

  3. 1884

    வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.

  4. 1897

    வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1907

    மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

  2. 1916

    முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.

  3. 1917

    முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.

  4. 1917

    பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  5. 1917

    கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

  6. 1921

    இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

  7. 1922

    ஐரிய சுதந்திர நாடு உருவானது.

  8. 1928

    கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

  9. 1941

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..

  10. 1957

    வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

  11. 1971

    இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.

  12. 1977

    தென்னாபிரிக்கா "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

  13. 1989

    மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  14. 1991

    குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.

  15. 1992

    அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.

  16. 1997

    சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.

  2. 2005

    சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

  3. 2006

    செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

  4. 2017

    எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பிறப்புகள்

Births · 11

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.