Skip to content

Popular

December 31 வியாழன்

On this day · December 31

வரலாற்றில் திசம்பர் 31

திசம்பர் 31 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 15 இறப்புகள் · 13

வரலாற்று நிகழ்வுகள்

Events · 36

6ஆம் நூற்றாண்டு

  1. 535

    பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1225

    வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1600

    பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1687

    நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

  2. 1695

    இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1775

    அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையின் தாக்குதலை முறியடித்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1847

    ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

  2. 1857

    விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.

  3. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.

  4. 1879

    வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.

  5. 1881

    இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1923

    லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1944

    இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.

  3. 1944

    இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.

  4. 1946

    அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

  5. 1963

    மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.

  6. 1965

    மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

  7. 1968

    உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

  8. 1981

    கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

  9. 1983

    நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.

  10. 1984

    ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

  11. 1986

    புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயமடைந்தனர்.

  12. 1987

    ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  13. 1991

    சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்தன.

  14. 1992

    செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.

  15. 1994

    முதலாம் செச்சினியப் போர்: உருசிய இராணுவம் குரோசுனி மீது தாக்குதலை ஆரம்பித்தது.

  16. 1994

    பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.

  17. 1999

    20-ஆம் நூற்றாண்டு, 2-ஆம் ஆயிரமாண்டு ஆகியவற்றின் கடைசி நாள்.

  18. 1999

    உருசியாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.

  19. 1999

    1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.

  20. 1999

    இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

  2. 2006

    ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

  3. 2009

    நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.

  4. 2011

    நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்றுவட்டத்துள் செலுத்தியது.

  5. 2014

    சாங்காயில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர், 49 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.