Skip to content

Popular

December 20 ஞாயிறு

On this day · December 20

வரலாற்றில் திசம்பர் 20

திசம்பர் 20 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 14 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 20 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

1ஆம் நூற்றாண்டு

  1. 69

    நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான்.

3ஆம் நூற்றாண்டு

  1. 217

    முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1192

    மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1334

    பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1606

    வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

  2. 1808

    இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.

  3. 1832

    போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.

  4. 1844

    இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

  5. 1860

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.

  2. 1917

    சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

  3. 1924

    இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை "பறக்கும் புலிகள்" சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

  6. 1943

    பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

  7. 1948

    புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின.

  8. 1951

    அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

  9. 1952

    ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.

  10. 1955

    கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

  11. 1957

    போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.

  12. 1971

    எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.

  13. 1973

    எசுப்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

  14. 1984

    இங்கிலாந்தில் பெனைன்சு மலைத்தொடர் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

  15. 1985

    திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.

  16. 1987

    பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர்.

  17. 1988

    போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.

  18. 1989

    பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

  19. 1995

    நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.

  20. 1995

    அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.

  21. 1999

    மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.

  22. 2000

    மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.

  2. 2007

    இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.