Skip to content

Popular

December 7 திங்கள்

On this day · December 7

வரலாற்றில் திசம்பர் 7

திசம்பர் 7 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 11 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 4

திசம்பர் 7 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 27

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 43

    உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.

6ஆம் நூற்றாண்டு

  1. 574

    பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1703

    பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1724

    போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

  3. 1787

    டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.

  2. 1922

    வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.

  3. 1932

    செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.

  4. 1936

    ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.

  6. 1941

    பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.

  7. 1946

    அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.

  8. 1949

    சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.

  9. 1966

    துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.

  10. 1971

    பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.

  11. 1972

    அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்பல்லோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.

  12. 1975

    கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.

  13. 1982

    அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

  14. 1983

    எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.

  15. 1987

    கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.

  16. 1988

    ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.

  17. 1988

    யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.

  18. 1995

    கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2015

    சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

  2. 2016

    பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.

  3. 2017

    ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

பிறப்புகள்

Births · 11

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.