Skip to content

Popular

December 21 திங்கள்

On this day · December 21

வரலாற்றில் திசம்பர் 21

திசம்பர் 21 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 24 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 21 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

1ஆம் நூற்றாண்டு

  1. 69

    வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1124

    இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1768

    நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1832

    எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர்.

  2. 1872

    சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1902

    இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

  2. 1907

    சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.

  3. 1910

    இங்கிலாந்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

  4. 1913

    உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

  5. 1919

    அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

  6. 1923

    ஐக்கிய இராச்சியமும் நேப்பாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

  7. 1937

    உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் சினோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.

  8. 1941

    இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்துக்கும் யப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  9. 1946

    சப்பான், நான்கைடோ என்ற இடத்தில் 8.1 Mw அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

  10. 1963

    சைப்பிரசில் துருக்கியர்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.

  11. 1965

    அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.

  12. 1967

    உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.

  13. 1968

    சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

  14. 1970

    எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.

  15. 1973

    அரபு-இசுரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

  16. 1979

    ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.

  17. 1988

    இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.

  18. 1988

    உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என் 225 மிரியா பறக்க விடப்பட்டது.

  19. 1991

    கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

  20. 1992

    இடச்சு விமானம் பாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.

  21. 1995

    பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    ஈராக் போர்: ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படைகள் மீதான தற்கொலைத் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

  2. 2007

    பாக்கித்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 24

இறப்புகள்

Deaths · 15

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.