Skip to content

Popular

December 29 செவ்வாய்

On this day · December 29

வரலாற்றில் திசம்பர் 29

திசம்பர் 29 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 25 பிறப்புகள் · 19 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 29 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 25

9ஆம் நூற்றாண்டு

  1. 875

    இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1170

    கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..

15ஆம் நூற்றாண்டு

  1. 1427

    மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1778

    அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1835

    மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  2. 1845

    டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

  3. 1851

    அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.

  4. 1874

    எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.

  5. 1876

    ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

  6. 1890

    வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1911

    மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.

  2. 1930

    அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

  3. 1937

    ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

  4. 1940

    இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  5. 1972

    புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

  6. 1975

    நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

  7. 1987

    326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

  8. 1993

    உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

  9. 1996

    குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

  10. 1997

    ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

  11. 1998

    கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.

  2. 2011

    சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.

  3. 2013

    உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.

  4. 2024

    பாங்காக்கில் இருந்து 181 பேருடன் புறப்பட்ட சேஜு ஏர் வானூர்தி தென் கொரியாவின் முவான் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.