Skip to content

Popular

December 16 புதன்

On this day · December 16

வரலாற்றில் திசம்பர் 16

திசம்பர் 16 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 19 இறப்புகள் · 6 சிறப்பு நாட்கள் · 4

திசம்பர் 16 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 28

15ஆம் நூற்றாண்டு

  1. 1431

    நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார்.

  2. 1497

    வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1575

    சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

  2. 1598

    கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1653

    சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1707

    சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

  2. 1761

    ஏழாண்டுப் போர்: நான்கு மாதங்கள் முற்றுகையின் பின்னர் உருசியா புருசியாவின் கொலோபிர்செக் கோட்டையைக் கைப்பற்றியது.

  3. 1773

    அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1811

    அமெரிக்காவின் மிசோரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

  2. 1835

    நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.

  3. 1857

    இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.

  4. 1880

    முதல் பூவர் போர்: தென்னாப்பிரிக்காவின் பூவர்களுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.

  2. 1920

    சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 1922

    போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் வார்சாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  4. 1925

    இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மீரி நகரைக் கைப்பற்றினர்.

  6. 1942

    பெரும் இன அழிப்பு: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிக் இம்லர் ரோமா மக்களை அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை ஆரம்பமானது. ஆர்டென் காட்டில் மூன்று செருமனிய இராணுவப் படைப்பிரிவுகள் திடீர்த் தாக்குதலை நடத்தின.

  8. 1947

    வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை உருவாக்கினர்.

  9. 1950

    கொரியப் போர்: சீனப் படைகள் வட கொரியாவின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக போரிட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் டுரூமன் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

  10. 1960

    அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.

  11. 1971

    வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

  12. 1971

    பகுரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

  13. 1991

    கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

  14. 2000

    அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்

21ஆம் நூற்றாண்டு

  1. 2013

    பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

  2. 2014

    பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பெசாவர் நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 6

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.