Skip to content

Popular

December 11 வெள்ளி

On this day · December 11

வரலாற்றில் திசம்பர் 11

திசம்பர் 11 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 26 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 2

திசம்பர் 11 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

4ஆம் நூற்றாண்டு

  1. 361

    யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 630

    10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார்.

9ஆம் நூற்றாண்டு

  1. 861

    அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

10ஆம் நூற்றாண்டு

  1. 969

    பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1282

    வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1688

    மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1789

    ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.

  2. 1792

    பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1816

    இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

  2. 1868

    பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது.

  2. 1907

    நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.

  3. 1917

    முதலாம் உலகப் போர்: பிரித்தானியத் தளபதி எட்மண்ட் அலென்பி எருசலேம் நகரை நடந்து சென்றடைந்து அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

  4. 1925

    கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்து அரசர் பெருவிழாவை அறிமுகப்படுத்தியது.

  5. 1927

    கம்யூனிச செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.

  6. 1931

    ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மேலாட்சி அரசுகளுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  7. 1936

    ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் எட்டாம் எட்வர்டு முடிதுறந்தார்.

  8. 1937

    இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர்: இத்தாலி உலக நாடுகள் சங்கத்தில் இருந்து வெளியேறியது.

  9. 1937

    எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

  10. 1941

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்ததை அடுத்து, செருமனி, இத்தாலி ஆகியன அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

  11. 1941

    இரண்டாம் உலகப் போர்: போலந்து சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்தது.

  12. 1941

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை வேக் தீவு சமரில் முதலாவது தோல்வியைச் சந்தித்தது.

  13. 1946

    ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.

  14. 1958

    மேல் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

  15. 1962

    கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.

  16. 1964

    சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

  17. 1972

    அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.

  18. 1981

    எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.

  19. 1990

    அல்பேனியாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆரம்பமானது. இதுவே காலப்போக்கில் அல்பேனியாவில் பொதுவுடைமை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

  20. 1993

    மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.

  21. 1994

    டோக்கியோ நோக்கிச் சென்ற பிலிப்பீனிய விமானம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

  22. 1994

    உருசியப் படைகள் செச்சினியாவில் ஊடுருவ உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆணையிட்டார்.

  23. 1998

    தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.

  2. 2005

    ஆத்திரேலியா, சிட்னியில் குரொனல்லா என்ற இடத்தில் வெள்ளை இன ஆத்திரேலியர்களுக்கும் லெபனானிய ஆத்திரேலியர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

பிறப்புகள்

Births · 26

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.