Skip to content

Popular

December 15 செவ்வாய்

On this day · December 15

வரலாற்றில் திசம்பர் 15

திசம்பர் 15 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 21 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

7ஆம் நூற்றாண்டு

  1. 687

    முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1025

    எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1256

    மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன.

18ஆம் நூற்றாண்டு

  1. 1778

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.

  2. 1799

    முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1864

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.

  2. 1891

    ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

  2. 1914

    முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.

  3. 1914

    சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.

  4. 1917

    முதலாம் உலகப் போர்: உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

  5. 1941

    பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.

  6. 1960

    மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

  7. 1961

    நாட்சி செருமனியின் இராணுவத்தலைவர் அடோல்வ் ஏச்மென் யூத மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்றார்.

  8. 1967

    ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.

  9. 1970

    சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

  10. 1970

    தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.

  11. 1978

    மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

  12. 1981

    லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது.

  13. 1994

    இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

  14. 1995

    ஈழப் போர்: ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.

  15. 1997

    தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.

  16. 1997

    தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

  2. 2006

    இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

  3. 2010

    90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

  4. 2013

    தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

  5. 2014

    சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.

  6. 2017

    சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.