Skip to content

Popular

December 30 புதன்

On this day · December 30

வரலாற்றில் திசம்பர் 30

திசம்பர் 30 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 11 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 30 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

11ஆம் நூற்றாண்டு

  1. 1066

    எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1460

    ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1813

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.

  2. 1853

    ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

  3. 1896

    பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.

  4. 1897

    பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக் கொண்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.

  2. 1906

    அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

  3. 1916

    உருசிய மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்சு யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் மாஸ்கோ ஆறொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

  4. 1916

    அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லசு முடிசூடினார்.

  5. 1922

    சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

  6. 1924

    யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

  7. 1924

    நாள்மீன்பேரடைகள் பலவற்றின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.

  8. 1941

    மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

  9. 1943

    சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

  10. 1947

    பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  11. 1949

    இந்தியா சீனாவை அங்கீகரித்தது.

  12. 1965

    பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

  13. 1972

    வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.

  14. 1993

    இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.

  15. 1996

    அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

  16. 1997

    அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.

  17. 2000

    பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.

  2. 2006

    எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

  3. 2006

    முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

  4. 2006

    நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.

  5. 2006

    முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

  6. 2013

    காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 11

இறப்புகள்

Deaths · 18

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.