Skip to content

Popular

December 4 வெள்ளி

On this day · December 4

வரலாற்றில் திசம்பர் 4

திசம்பர் 4 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 20 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1

திசம்பர் 4 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 24

13ஆம் நூற்றாண்டு

  1. 1259

    பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1619

    38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.

  2. 1639

    ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1791

    உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1829

    ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.

  2. 1865

    வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.

20ஆம் நூற்றாண்டு

  1. 1918

    முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.

  2. 1939

    இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் இசுக்காட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.

  3. 1943

    இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.

  4. 1945

    ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.

  5. 1957

    ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.

  6. 1958

    பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.

  7. 1959

    ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.

  8. 1967

    வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.

  9. 1971

    இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.

  10. 1971

    பாக்கித்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

  11. 1971

    இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.

  12. 1977

    மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.

  13. 1984

    குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.

  14. 1984

    1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.

  15. 1991

    டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.

  16. 1991

    ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

  17. 1992

    அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.