மேஷம்
· Mesham (Aries)
★★☆☆☆
மேஷ ராசி நண்பர்களே, எதிர்பாராத தடைகள் வரலாம்; பொறுமை அவசியம். குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரித்து சோர்வு உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
ரிஷபம்
· Rishabam (Taurus)
★★★★★
ரிஷப ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.
மிதுன ராசி நண்பர்களே, நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்; கடன் சுமை குறையும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பணவரவு நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கடகம்
· Kadagam (Cancer)
★★★★☆
கடக ராசி நண்பர்களே, பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். உத்யோக மாற்றம் ஏற்படலாம். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
சிம்ம ராசி நண்பர்களே, தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை; வாகனத்தில் மெதுவாக செல்லவும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
கன்னி
· Kanni (Virgo)
★★★☆☆
கன்னி ராசி நண்பர்களே, புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை சேரும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம் ராசி நண்பர்களே, பேச்சில் நிதானம் தேவை; வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற அலைய வேண்டிவரும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும்.
விருச்சிக ராசி நண்பர்களே, மனதில் மகிழ்ச்சி பொங்கும்; நல்ல உணவும் ஓய்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு உயரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
தனுசு
· Dhanusu (Sagittarius)
★★☆☆☆
தனுசு ராசி நண்பர்களே, தூக்கமின்மை வரலாம்; வீண் செலவுகளை குறைக்கவும். உறவினர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். திடீர் மருத்துவ செலவு வரலாம். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சிக்கல்கள் வரலாம்.
மகரம்
· Magaram (Capricorn)
★★★★☆
மகர ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்; எண்ணங்கள் ஈடேறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபார விரிவாக்க முயற்சிகள் கைகூடும்.
கும்ப ராசி நண்பர்களே, செய்யும் வேலையில் வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
மீனம்
· Meenam (Pisces)
★★☆☆☆
மீன ராசி நண்பர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.