Skip to content

Popular

December 3 வியாழன்

On this day · December 3

வரலாற்றில் திசம்பர் 3

திசம்பர் 3 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 16 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 2

திசம்பர் 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

10ஆம் நூற்றாண்டு

  1. 915

    இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1592

    முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1795

    ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

  2. 1799

    வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.

  3. 1800

    மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1818

    இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.

  2. 1854

    அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1903

    சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

  2. 1904

    வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

  3. 1910

    நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.

  4. 1912

    பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.

  5. 1919

    20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.

  6. 1927

    முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.

  7. 1944

    கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

  8. 1959

    சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  9. 1967

    தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

  10. 1971

    1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.

  11. 1973

    வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

  12. 1976

    ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

  13. 1978

    வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

  14. 1979

    அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.

  15. 1984

    போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

  16. 1989

    பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.

  17. 1992

    80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.

  18. 1992

    உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.

  19. 1994

    பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.

  20. 1997

    நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.

  21. 1999

    செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

  2. 2009

    சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.

  3. 2012

    பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.

  4. 2014

    சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.

பிறப்புகள்

Births · 16

இறப்புகள்

Deaths · 10

இம்மாத நாட்கள் · திசம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.