திசம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
Events
1606
திசம்பர் 20
1606
திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1513 ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1618 ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார். அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1803 கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1827 ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார். ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1879 நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 20 அன்று மேலும்
- 69 நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 217 முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 217 செஃபிரீனுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1192 மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1334 பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1803 பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1808 இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1832 போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆங்கிலேயர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.