Skip to content

Popular

November 15 ஞாயிறு

On this day · November 15

வரலாற்றில் நவம்பர் 15

நவம்பர் 15 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4

நவம்பர் 15 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 36

6ஆம் நூற்றாண்டு

  1. 565

    மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1505

    போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

  2. 1532

    பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர்.

  3. 1533

    எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1705

    சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன.

  2. 1791

    முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1864

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் சேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.

  2. 1889

    பிரேசிலை குடியரசாக இரண்டாம் பெதுரோ அறிவித்தார். ஆனாலும் அதனை அடுத்து நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    வின்ஸ்டன் சர்ச்சில் லிபரல் அரசில் இருந்து பதவி விலகி, மேற்கு முன்னணியின் 6-வது படைப் பிரிவில் இணைந்தார்.

  2. 1920

    உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது அமர்வு ஜெனீவாவின் இடம்பெற்றது.

  3. 1922

    எக்குவடோர், உவயாகில் நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  4. 1928

    இங்கிலாந்தில் மேரி ஸ்டான்போர்டு ரை துறைமுகத்தில் மூழ்கியதில் அதன் அனைத்து 17 ஊழியரும் உயிரிழந்தனர்.

  5. 1933

    தாய்லாந்தில் முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

  6. 1941

    நாட்சி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

  7. 1942

    இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் சப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.

  8. 1943

    பெரும் இன அழிப்பு: நாட்சி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

  9. 1948

    இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

  10. 1949

    நாத்தூராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் மகாத்மா காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.

  11. 1966

    போயிங் 727 வானூர்தி ஒன்று பெர்லினில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

  12. 1966

    ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

  13. 1969

    பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி கே-19 அமெரிக்காவின் காட்டோ என்ற நீர்மூழ்கியுடன் பேரன்ட்சு கடலில் மோதி மூழ்கியது.

  14. 1969

    வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

  15. 1971

    இன்டெல் நிறுவனம் உலகின் முதலாவது வணிகரீதியிலான 4004 என்ற ஒற்றைச்சில் நுண்செயலியை வெளியிட்டது.

  16. 1978

    டக்ளஸ் டிசி-8 தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர்.

  17. 1983

    வடக்கு சைப்பிரசின் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.

  18. 1987

    உருமேனிய சோசலிசக் குடியரசு, பிராசொவ் நகரில் தொழிலாளரக்ள் கம்யூனிச அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

  19. 1988

    சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பியூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.

  20. 1988

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: பாலத்தீனம் தனிநாடாக பாலத்தீன தேசியப் பேரவையினால் அறிவிக்கப்பட்டது.

  21. 1990

    கம்யூனிச பல்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு புதிய குடியரசு நிறுவப்பட்டது.

  22. 1990

    அட்லாண்டிஸ் விண்ணோடம் எஸ்டிஎஸ்-38 விண்கலத்தை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

  23. 2000

    அங்கோலா, லுவாண்டாவில் அன்டோனொவ் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.

  24. 2000

    இந்தியாவில் சார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2002

    கூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

  2. 2007

    வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

  3. 2012

    சீ சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

  4. 2018

    கஜா புயல் தமிழகத்தை குறிப்பாக டெல்டா பகுதிகளில் பெறும் சேதத்தை ஏற்படுத்தியது.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.