Skip to content

Popular

November 2 திங்கள்

On this day · November 2

வரலாற்றில் நவம்பர் 2

நவம்பர் 2 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 21 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3

நவம்பர் 2 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

7ஆம் நூற்றாண்டு

  1. 619

    மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1675

    பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1795

    ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1834

    முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.

  2. 1868

    நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

  3. 1868

    இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

  4. 1889

    வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

  5. 1899

    இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.

  2. 1914

    முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.

  3. 1917

    உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.

  4. 1917

    பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

  5. 1920

    அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.

  6. 1936

    பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

  7. 1936

    கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

  8. 1949

    இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.

  9. 1951

    சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.

  10. 1953

    பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

  11. 1956

    அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.

  12. 1956

    சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.

  13. 1963

    தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

  14. 1964

    சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.

  15. 1965

    வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.

  16. 1966

    கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.

  17. 1974

    தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.

  18. 1984

    அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

  19. 1999

    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  20. 2000

    பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  2. 2007

    இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

  3. 2007

    மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · நவம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நவம்பர் 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.