Skip to content

Popular

September 8 செவ்வாய்

On this day · September 8

வரலாற்றில் செப்டம்பர் 8

செப்டம்பர் 8 அன்று நிகழ்ந்த 80 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 12 இறப்புகள் · 21 சிறப்பு நாட்கள் · 8

செப்டம்பர் 8 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 39

7ஆம் நூற்றாண்டு

  1. 617

    லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1198

    பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1276

    இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1331

    இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

  2. 1380

    குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன.

16ஆம் நூற்றாண்டு

  1. 1504

    மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது.

  2. 1514

    நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.

  3. 1522

    பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு செவீயா திரும்பியது.

  4. 1565

    மே 18 இல் ஆரம்பமான மால்ட்டா மீதான உதுமானியரின் முற்றுகை முடிவடைந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1655

    வார்சாவா நகரம் சுவீடனின் ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1727

    இங்கிலாந்து, பர்வெல் என்ற இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

  2. 1761

    ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார்.

  3. 1775

    மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

  4. 1796

    பிரெஞ்சுப் படையினர் ஆத்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1831

    நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.

  2. 1860

    லேடி எல்ஜின் என்ற நீராவிக் கப்பல் மிச்சிகன் ஏரியில் மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

  3. 1888

    லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சேப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

  4. 1900

    டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1914

    முதலாம் உலகப் போர்: போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

  3. 1923

    கலிபோர்னியாவில் ஏழு அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின, 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.

  4. 1925

    எசுப்பானியப் படைகள் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையில் மொரோக்கோவில் தரையிறங்கின.

  5. 1926

    செருமனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.

  6. 1933

    ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.

  7. 1934

    நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.

  8. 1941

    இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகளின் லெனின்கிராட் முற்றுகை ஆரம்பமானது.

  9. 1943

    இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தைப் பொது மக்களுக்கு அறிவித்தார்.

  10. 1944

    இரண்டாம் உலகப் போர்: வி-2 ஏவுகணை மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.

  11. 1945

    சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

  12. 1946

    பல்கேரியாவில் முடியாட்சி பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.

  13. 1954

    தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது.

  14. 1970

    நியூயார்க் நகரில் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

  15. 1974

    வாட்டர்கேட் சர்ச்சை: பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக ரிச்சார்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் கையெழுத்திட்டார்.

  16. 1978

    கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.

  17. 1989

    டென்மார்க்கில் விமானம் ஒன்று வட கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.

  18. 1991

    மாக்கடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

  19. 1994

    அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

  2. 2016

    நாசா ஒசைரிசு-ரெக்சு என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பியது.

பிறப்புகள்

Births · 12

இறப்புகள்

Deaths · 21

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.