Skip to content

Popular

September 12 சனி

On this day · September 12

வரலாற்றில் செப்டம்பர் 12

செப்டம்பர் 12 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 20 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

செப்டம்பர் 12 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 490

    மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1185

    பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1609

    என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.

  2. 1634

    மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.

  3. 1683

    உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.

18ஆம் நூற்றாண்டு

  1. 1762

    சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.

  2. 1848

    சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

  3. 1857

    மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

  4. 1890

    ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1915

    பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.

  2. 1923

    தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

  3. 1933

    அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

  4. 1940

    குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

  5. 1940

    நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

  6. 1942

    இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் செருமனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

  7. 1943

    இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து செருமனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

  8. 1948

    முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.

  9. 1959

    லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

  10. 1974

    எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  11. 1977

    தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

  12. 1980

    துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

  13. 1990

    செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.

  14. 1992

    நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான "ஆன்செட் ஆஸ்திரேலியா" மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

  2. 2003

    லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.

  3. 2006

    திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு முசுலிம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

  4. 2008

    லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.

  5. 2015

    மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.