Skip to content

Popular

September 3 வியாழன்

On this day · September 3

வரலாற்றில் செப்டம்பர் 3

செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2

செப்டம்பர் 3 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

4ஆம் நூற்றாண்டு

  1. 301

    உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.

6ஆம் நூற்றாண்டு

  1. 590

    முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

9ஆம் நூற்றாண்டு

  1. 863

    அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1189

    முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1260

    பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1650

    மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர்.

  2. 1651

    வூர்ஸ்டர் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போரின் கடைசிச் சமரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தோற்றார்.

  3. 1658

    ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1759

    இலங்கை இடச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது.

  2. 1783

    அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவுக்கும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையில் 1783 பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

  3. 1798

    பெலீசின் கரையில் எசுப்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1801

    பிரித்தானிய இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

  2. 1812

    அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் 24 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

  3. 1843

    ஏதென்சு நகரில் கிளர்ச்சி இடம்பெற்றதை அடுத்து கிரேக்க மன்னர் ஓட்டோ அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

  4. 1855

    நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.

  5. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் நடுநிலை வகித்த கென்டக்கியைத் தாக்கின.

  6. 1875

    முதலாவது அதிகாரபூர்வமான போலோ விளையாட்டு அர்கெந்தீனாவில் விளையாடப்பட்டது.

  7. 1878

    தேம்சு நதியில் "பிரின்சஸ் அலீசு" பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

  8. 1879

    காபூல் நகரில் பிரித்தானியத் தூதர் சர் லூயிசு கவக்னாரியும் அவரது 72 ஊழியர்களும் ஆப்கானித்தான் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1914

    அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

  2. 1916

    முதலாம் உலகப் போர்: வடக்கு இலண்டனில் செருமானிய வான்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வீழ்த்தப்பட்ட முதலாவது செருமனிய வான்கப்பல் இதுவாகும்.

  3. 1933

    சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ உயர இசுமோயில் சொமோனி உச்சி, இன்றைய தஜிகிஸ்தான்) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.

  4. 1939

    இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான செருமனியின் படையெடுப்பை அடுத்து பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன செருமனி மீது போர் தொடுத்தன. நேசப் படைகள் என்ற அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினர்.

  5. 1939

    இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது கடல்-வழித் தடையை ஏற்படுத்தின.

  6. 1941

    பெரும் இன அழிப்பு: அவுசுவிட்சு வதைமுகாமின் பாதுகாப்பு அதிகாரி கார்ல் பிரீட்சு சோவியத் போர்க்கைதிகள் மீது சைக்லோன் பி என்ற நச்சு வாயுவைப் பரிசோதித்தான்.

  7. 1943

    இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு ஆரம்பமானது. இதே நாளில் அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர், இத்தாலியத் தளபதி பீத்ரோ பாதொக்லியோ ஆகியோருக்கிடையில் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் மால்ட்டாவில் அரச கடற்படைப் போர்க்கப்பல் ஒன்றில் கையெழுத்திடப்பட்டது.

  8. 1944

    பெரும் இன அழிப்பு: நாட்குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பமும் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு புறப்பட்டனர். இவர்கள் மூன்று நாட்கள் கழித்து அங்கு வந்தடைந்தனர்.

  9. 1945

    சப்பான் மீதான சீனாவின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

  10. 1954

    மக்கள் விடுதலை இராணுவம் சீனக் குடியரசு-கட்டுப்பாட்டுப் பகுதியான கீமோய் தீவு மீது எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்தன. முதலாவது தைவான் நீரிணை நெருக்கடி ஆரம்பமானது.

  11. 1958

    தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  12. 1967

    சுவீடனில் இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது.

  13. 1971

    கத்தார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

  14. 1976

    அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

  15. 1981

    பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டு வரப்பட்டது.

  16. 1987

    புருண்டி இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பாப்டிஸ்ட் பகாசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  17. 1997

    வியட்நாம் ஏர்லைன்சு விமானம் நோம் பென் விமான நிலையம் அருகே வீழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் 186 மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2017

    வட கொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல் மிக்கதுமான அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.