Skip to content

Popular

September 14 திங்கள்

On this day · September 14

வரலாற்றில் செப்டம்பர் 14

செப்டம்பர் 14 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1

செப்டம்பர் 14 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

1ஆம் நூற்றாண்டு

  1. 81

    டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

7ஆம் நூற்றாண்டு

  1. 629

    பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.

8ஆம் நூற்றாண்டு

  1. 786

    அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1752

    கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1808

    பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன.

  2. 1812

    நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

  3. 1829

    உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

  4. 1846

    கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் அவனது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1901

    நான்காம் தமிழ்ச் சங்கம் என அழைக்கப்படும் மதுரைத் தமிழ்ச் சங்கம் பாண்டித்துரைத் தேவரால் தோற்றுவிக்கப்பட்டது.

  2. 1901

    அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார்.

  3. 1914

    ஆத்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஏஈ1 பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.

  4. 1917

    உருசியப் பேரரசு அதிகாரபூர்வமாகக் உருசியக் குடியரசானது.

  5. 1940

    அங்கேரிய இராணுவம் உள்ளூர் அங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு டிரான்சில்வேனியாவில் 158 உருமேனியர்களைப் படுகொலை செய்தனர்.

  6. 1943

    இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

  8. 1948

    போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.

  9. 1954

    சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

  10. 1959

    சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

  11. 1960

    அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார்.

  12. 1960

    எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

  13. 1979

    அஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

  14. 1982

    லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

  15. 1984

    ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.

  16. 1985

    மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

  17. 1992

    எர்செக்-பொசுனியா தனிநாடாகப் பிரிந்தது சட்டபூர்வமற்றது என பொசுனியா எர்செகோவினாவின் அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  18. 1997

    இந்தியாவின் மத்தியப் பிரதேசம், பிலாசுப்பூர் மாவட்டத்தில் விரைவுத் தொடர்வண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

  19. 1999

    கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன.

  20. 2000

    எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

  21. 2000

    விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இறந்தவரக்ளுக்கான நினைவுகூர்தல் நிகழ்வு வாசிங்டன் தேசியப் பேராலயத்தில் இடம்பெற்றது.

  2. 2003

    சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

  3. 2003

    ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

  4. 2005

    நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

  5. 2008

    உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

  6. 2015

    ஈர்ப்பு அலைகள் குறித்த முதலாவது அவதானிப்பு அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.