Skip to content

Popular

September 27 ஞாயிறு

On this day · September 27

வரலாற்றில் செப்டம்பர் 27

செப்டம்பர் 27 அன்று நிகழ்ந்த 75 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 22 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2

செப்டம்பர் 27 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 37

11ஆம் நூற்றாண்டு

  1. 1066

    நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1529

    உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார்.

  2. 1540

    இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.

  3. 1590

    திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1605

    கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1777

    அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகளின் முற்றுகையைத் தவிர்க்கும் பொருட்டு, பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.

  2. 1791

    யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்சின் நாடாளுமன்றம் வாக்களித்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1822

    ரொசெட்டாக் கல் சான்-பிரான்சுவா காம்போலியன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

  2. 1825

    உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

  3. 1854

    "ஆர்க்டிக்" நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

  4. 1893

    சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் நாடாளுமன்ற மாநாடு நிறைவடைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1916

    எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து ஐந்தாம் இயாசு மன்னர் பதவியை இழந்தார்.

  2. 1922

    முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியில் இருந்து முடி துறந்தார். அவரது மூத்தமகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடி சூடினான்.

  3. 1928

    ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.

  4. 1938

    குயீன் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

  5. 1940

    இரண்டாம் உலகப் போர்: செருமனி, சப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பெர்லின் நகரில் கையெழுத்திட்டன.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.

  7. 1947

    தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.

  8. 1949

    சேங் லியோன்சாங் சீனாவின் கொடியை வடிவமைத்தார்.

  9. 1956

    அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் கொல்லப்பட்டார்.

  10. 1959

    சப்பான், ஒன்சூ தீவில் இடம்பெற்ற சூறாவளியில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

  11. 1962

    யெமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.

  12. 1964

    ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

  13. 1975

    எசுப்பானியாவில் கடைசி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. போராளிக் குழுவைச் சேர்ந்த ஐவர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

  14. 1977

    சப்பான் ஏர்லைன்சு வானூர்தி மலேசியா, சுபாங் நகரில் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

  15. 1983

    ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.

  16. 1993

    அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

  17. 1994

    மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.

  18. 1996

    ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

  19. 1998

    கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

  20. 1998

    கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

  2. 2002

    கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.

  3. 2007

    நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.

  4. 2008

    இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.

  5. 2008

    சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

  6. 2014

    சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.