Skip to content

Popular

September 1 செவ்வாய்

On this day · September 1

வரலாற்றில் செப்டம்பர் 1

செப்டம்பர் 1 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 17 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

செப்டம்பர் 1 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

15ஆம் நூற்றாண்டு

  1. 1420

    சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.

  2. 1449

    மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1529

    அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.

  2. 1532

    ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1604

    சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1715

    பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.

  2. 1798

    இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1804

    சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

  2. 1859

    1859 சூரியப் புயல் இடம்பெற்றது.

  3. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.

  4. 1864

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.

  5. 1880

    காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.

  6. 1894

    அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.

  7. 1897

    வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.

  2. 1914

    உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.

  3. 1914

    மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

  4. 1923

    டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.

  5. 1928

    அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

  6. 1939

    இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.

  7. 1939

    ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.

  8. 1951

    ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.

  9. 1961

    கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.

  10. 1961

    எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.

  11. 1969

    லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.

  12. 1970

    யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

  13. 1972

    ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.

  14. 1979

    நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கி.மீ. தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

  15. 1981

    மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  16. 1983

    பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.

  17. 1984

    யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

  18. 1985

    அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

  19. 1991

    உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2004

    பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2007

    மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.