Skip to content

Popular

September 28 திங்கள்

On this day · September 28

வரலாற்றில் செப்டம்பர் 28

செப்டம்பர் 28 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 18 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2

செப்டம்பர் 28 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 48

    எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான்.

3ஆம் நூற்றாண்டு

  1. 235

    போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார்.

10ஆம் நூற்றாண்டு

  1. 935

    பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1066

    நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1238

    அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1322

    புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1781

    அமெரிக்கப் புரட்சி: அமெரிக்கப் படைகள் பிரெஞ்சுக் கடற்படைகளின் உதவியுடன் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரை முற்றுகையிட்டன.

  2. 1795

    யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.

19ஆம் நூற்றாண்டு

  1. 1844

    முதலாம் ஒஸ்கார் சுவீடன் மன்னராக முடிசூடினார்.

  2. 1867

    டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

  3. 1868

    சல்கொலேயா போரை அடுத்து எசுப்பானியாவின் அரசி இரன்டாம் இசபெல்லா பிரான்சுக்குத் தப்பி ஓடினார்.

  4. 1871

    அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

  5. 1889

    நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.

  6. 1895

    யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1901

    பிலிப்பீனியத் தீவிரவாதிகள் கிழக்கு சமார் பகுதியில் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

  2. 1919

    அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களில் மூவர் இறந்தனர்.

  3. 1928

    அலெக்சாண்டர் பிளெமிங் தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.

  4. 1939

    இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.

  5. 1939

    இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சாவா செருமனியிடம் வீழ்ந்தது.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாட்சிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.

  7. 1950

    இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.

  8. 1951

    சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன.

  9. 1960

    மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

  10. 1961

    டமாசுகசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது

  11. 1970

    எகிப்தியத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர் மாரடைப்பினால் காலமானார்.

  12. 1992

    பாக்கித்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேப்பாளத்தில் மலையில் மோதியதை அடுத்து, அதில் பயணம் செய்த அனைத்து 167 பேரும் உயிரிழந்தனர்.

  13. 1993

    யாழ்ப்பாணத்தில் கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட "யாழ்தேவி இராணுவ நடவடிக்கை" விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

  14. 1994

    பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.

  15. 1995

    இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் காசாக் கரை தொடர்பான இடைக்கால உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

  16. 1995

    பாப் டெனார்டு என்ற பிரெஞ்சு போர் வீரன் தனது கூலிப் படைகளுடன் சேர்ந்து கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினான்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.

  2. 2009

    கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.

  3. 2018

    இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 18

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.