Skip to content

Popular

September 24 வியாழன்

On this day · September 24

வரலாற்றில் செப்டம்பர் 24

செப்டம்பர் 24 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 20 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3

செப்டம்பர் 24 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

8ஆம் நூற்றாண்டு

  1. 787

    நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1645

    முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன.

  2. 1674

    பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1789

    அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.

  2. 1799

    கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1840

    இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.

  2. 1841

    புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.

  3. 1852

    நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.

  4. 1853

    மெலனீசியாவில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளை பிரான்சு கைப்பற்றியது.

  5. 1869

    ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.

  6. 1890

    இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறிஸ்து சபை பலதுணை மணத்தைக் கைவிட்டது.

  7. 1898

    அமெரிக்க மிசன் யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமைத்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1906

    வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

  2. 1932

    பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.

  3. 1946

    கதே பசிபிக் நிறுவனம் ஆங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1948

    ஒண்டா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

  5. 1950

    காட்டுத்தீ கனடா, மற்றும் புதிய இங்கிலாந்தின் பெரும் பகுதியை மூடியது. நீல நிலவு ஐரோப்பா வரை தெரிந்தது.

  6. 1960

    அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் "என்டர்பிரைசு" அமைக்கப்பட்டது.

  7. 1968

    சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.

  8. 1972

    இலண்டனில் இருந்து புறப்பட்ட யப்பான் ஏர்லைன்சு 472 வானூர்தி மும்பை சாண்டாகுரூசு வானூர்தி நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜூகு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கி பெரும் சேதமடைந்தது. 11 பேர் காயமடைந்தனர்.

  9. 1973

    கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

  10. 1990

    சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

  11. 1993

    கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.

  12. 1996

    ஐக்கிய நாடுகள் அவையில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  2. 2008

    தாபோ உம்பெக்கி தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

  3. 2013

    தெற்குப் பாக்கித்தானில் 7.7-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 327 பேர் உயிரிழந்தனர்.

  4. 2014

    மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

  5. 2015

    சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர், 934 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 20

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.