Skip to content

Popular

September 20 ஞாயிறு

On this day · September 20

வரலாற்றில் செப்டம்பர் 20

செப்டம்பர் 20 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 12 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

செப்டம்பர் 20 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

12ஆம் நூற்றாண்டு

  1. 1187

    சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1378

    கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1498

    சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1519

    பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1697

    ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1847

    நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.

  2. 1854

    கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில் உருசியரைத் தோற்கடித்தன.

  3. 1857

    கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

  4. 1878

    தி இந்து முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

  5. 1893

    அமெரிக்காவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பெட்ரோலினால் இயங்கும் தானுந்து சோதிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1909

    நன்னம்பிக்கை முனை, நட்டால், ஒரேஞ்சு, திரான்சுவால் ஆகிய பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.

  2. 1932

    மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

  3. 1941

    லித்துவேனியாவில் 403 யூதர்கள் (128 ஆண்கள், 176 பெண்கள், 99 குழந்தைகள்) கொல்லப்பட்டனர்.

  4. 1942

    உக்ரைனில் நாட்சி ஜெர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: கனடாவின் போர்க்கப்பல் ஒன்று ஐசுலாந்தின் தெற்கே தாக்கி அழிக்கப்பட்டதில் 145 பேர் கொல்லப்பட்டனர்.

  6. 1945

    மகாத்மா காந்தியும் சவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.

  7. 1946

    போரினால் 7 ஆண்டுகள் நடத்தப்படாதிருந்த கான் திரைப்பட விழா இடம்பெற்றது.

  8. 1946

    பொது வாக்கெடுப்பு நடைபெற்று ஆறு நாட்களின் பின்னர், டென்மார்க் மன்னர் பத்தாம் கிறித்தியான் பரோயே தீவுகளின் விடுதலைப் பிரடனத்தை ரத்துச் செய்தார்.

  9. 1955

    சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

  10. 1966

    சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.

  11. 1977

    வியட்நாம் ஐநாவில் இணைந்தது.

  12. 1979

    பிரான்சின் ஆதரவுடன் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து முதலாம் பொக்காசா பேரரசர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  13. 1984

    லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

  14. 1990

    சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டப்பட்டனர்.

  15. 1990

    தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

  16. 1993

    துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அறிவித்தார்.

  2. 2003

    மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது.

  3. 2017

    சூறாவளி மரியா புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.

  4. 2018

    தன்சானியா, விக்டோரியா ஏரியில் உக்காரா தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 161 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 12

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.