Skip to content

Popular

September 13 ஞாயிறு

On this day · September 13

வரலாற்றில் செப்டம்பர் 13

செப்டம்பர் 13 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

13ஆம் நூற்றாண்டு

  1. 1229

    ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1437

    போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1501

    மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

  2. 1541

    மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார்.

  3. 1584

    எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1609

    என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1743

    பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, சார்தீனிய இராச்சியம் ஆகியன அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

  2. 1759

    ஏழாண்டுப் போர்: கனடாவின் கியூபெக் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.

  3. 1782

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சிய-எசுப்பானியப் படைகள் ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகையை ஆரம்பித்தன.

  4. 1788

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவர் தேர்தலுக்கான திகதி பிலடெல்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக நியூயோர்க் நகரம் அறிவிக்கப்பட்டது.

  5. 1791

    பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1814

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  2. 1847

    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.

  3. 1898

    அனிபால் குட்வின் செலுலாயிடு புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.

  4. 1899

    ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தானுந்து விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1923

    எசுப்பானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.

  2. 1948

    ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

  3. 1949

    இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, யோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.

  4. 1953

    நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  5. 1956

    ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை அறிமுகப்படுத்தியது.

  6. 1968

    பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.

  7. 1971

    மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.

  8. 1971

    நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1987

    பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.

  10. 1989

    டெசுமான்ட் டுட்டுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

  11. 1993

    நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார்.

  12. 1995

    கொழும்பு இரத்மலானையில் இருந்து பலாலிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி ஜா-எல அருகே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவில் விமான சேவைகள் ஆரம்பமாயின.

  2. 2007

    பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  3. 2008

    தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.

  4. 2013

    தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானித்தான் எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.

  5. 2018

    மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 13

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.