Skip to content

Popular

September 6 ஞாயிறு

On this day · September 6

வரலாற்றில் செப்டம்பர் 6

செப்டம்பர் 6 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 15 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1

செப்டம்பர் 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 35

4ஆம் நூற்றாண்டு

  1. 394

    உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1522

    பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1620

    வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.

  2. 1642

    இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.

  2. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.

  3. 1863

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.

  4. 1873

    இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.

  5. 1885

    கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1901

    அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

  2. 1930

    அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  3. 1939

    இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.

  4. 1940

    உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.

  5. 1943

    அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.

  6. 1944

    இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் இப்பிரசு நகரம் கூட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.

  7. 1944

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.

  8. 1946

    இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

  9. 1951

    தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

  10. 1952

    இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.

  11. 1955

    துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

  12. 1965

    இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

  13. 1966

    தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

  14. 1968

    சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

  15. 1970

    ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  16. 1972

    மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது பலத்தீன கறுப்பு செப்டம்பர் தீவிரவாதிகள் ஒன்பது இசுரேலிய விளையாட்டு வீரர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டனர்.

  17. 1976

    பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.

  18. 1986

    யூத ஓய்வு நாளின் போது இசுதான்புலில் இரண்டு தீவிரவாதிகள் யூத தொழுகைக் கூடம் ஒன்றில் 22 பேரைக் கொன்றனர்.

  19. 1990

    யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

  20. 1991

    எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

  21. 1991

    1991 அக்டோபர் 1 முதல் உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்படுவதற்கு உருசிய நாடாளுமன்ரம் ஒப்புதல் அளித்தது.

  22. 1997

    டயானாவின் உடல் இலண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    பலத்தீனப் பிரதமர் மகுமுது அப்பாசு பதவி விலகினார்.

  2. 2007

    ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.

  3. 2009

    பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.

  4. 2012

    துருக்கியில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தன்ர்.

பிறப்புகள்

Births · 15

இறப்புகள்

Deaths · 14

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.