Skip to content

Popular

September 21 திங்கள்

On this day · September 21

வரலாற்றில் செப்டம்பர் 21

செப்டம்பர் 21 அன்று நிகழ்ந்த 77 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 24 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 6

செப்டம்பர் 21 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 31

5ஆம் நூற்றாண்டு

  1. 455

    பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1170

    டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது.

18ஆம் நூற்றாண்டு

  1. 1776

    நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.

  2. 1792

    பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1843

    ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார்.

  2. 1860

    இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன.

  3. 1896

    பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.

  4. 1898

    பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1921

    செருமனியில் தொழிற்சாலைக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

  2. 1934

    சப்பானில் மேற்கு ஒன்சூ பகுதியில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் உயிரிழந்தனர்.

  3. 1938

    நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் உயிரிழந்தனர்.

  4. 1939

    உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  5. 1942

    பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.

  6. 1942

    உக்ரைனில் துனைவ்த்சி நகரில் 2,588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

  7. 1949

    மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.

  8. 1964

    மால்ட்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனால் பொதுநலவாயத்தில் தொடர்ந்தது.

  9. 1965

    காம்பியா, மாலைத்தீவுகள், சிங்கப்பூர் ஆகியன ஐநாவில் இணைந்தன.

  10. 1971

    பகுரைன், பூட்டான், கத்தார் ஆகியன ஐநாவில் இணைந்தன.

  11. 1972

    பிலிப்பீன்சு அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.

  12. 1976

    சீசெல்சு ஐநாவில் இணைந்தது.

  13. 1981

    பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத

  14. 1984

    புரூணை ஐநாவில் இணைந்தது.

  15. 1989

    இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  16. 1990

    மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

  17. 1991

    ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

  18. 1993

    உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்துச் செய்தார்.

  19. 1999

    தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கி.மீ. தூரத்திற்குள் சென்றது.

  2. 2003

    கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

  3. 2013

    இலங்கையின் வட மாகாண சபைக்கு முதல் தடவையாகத் தேர்தல் நடைபெற்றது.

  4. 2013

    கென்யாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 24

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.