Skip to content

Popular

September 2 புதன்

On this day · September 2

வரலாற்றில் செப்டம்பர் 2

செப்டம்பர் 2 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 16 இறப்புகள் · 19 சிறப்பு நாட்கள் · 5

செப்டம்பர் 2 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 38

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 44

    எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள்.

  2. கிமு 31

    கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.

12ஆம் நூற்றாண்டு

  1. 1192

    மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1649

    காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.

  2. 1666

    இலண்டனின் பெரும் தீ: இலண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

18ஆம் நூற்றாண்டு

  1. 1752

    மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

  2. 1792

    பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1806

    சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.

  2. 1807

    நெப்போலியனிடம் டென்மார்க் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசக் கடற்படை கோபனாவன் நகர் மீது எரி குண்டுகளை வீசின.

  3. 1856

    சீனாவின் நாஞ்சிங்கில் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.

  4. 1862

    யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது.

  5. 1864

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.

  6. 1870

    பிரான்சில் 'செடான்' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.

  7. 1885

    அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.

  8. 1898

    பிரித்தானிய, எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை நிலைநாட்டினர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1935

    வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதில், புளோரிடா மாநிலத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

  2. 1939

    இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

  3. 1945

    இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

  4. 1945

    வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

  5. 1946

    பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

  6. 1951

    எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

  7. 1957

    தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.

  8. 1958

    அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

  9. 1960

    திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.

  10. 1970

    சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

  11. 1984

    ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இரு குழுக்கலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்தனர்.

  12. 1985

    ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

  13. 1988

    இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.

  14. 1990

    மல்தோவாவின் ஒரு பகுதியான திரான்சுனிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

  15. 1992

    நிக்கராகுவாவில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

  16. 1996

    பிலிப்பீன்சு அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  17. 1998

    ஐநாவின் ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ருவாண்டாவின் சிறியநகரம் ஒன்றின் முன்னாள் நகரத்தந்தை சாந்பவும் அக்கயெசு என்பவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் 9 குற்றஙளுக்குக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.

  18. 1998

    நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் உயிரிழந்தனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

  2. 2009

    கர்னூல், ஆந்திரப் பிரதேசம், கர்னூலில் இருந்து 74 கி.மீ. தூரத்தில் உலங்கு வானூர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

  3. 2010

    இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுகக்ளை அமெரிக்கா ஆரம்பித்தது.

  4. 2018

    பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.

  5. 2023

    இந்திய சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்தியா எல் 1 வெற்றிகரமாக சூரியனை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்புகள்

Births · 16

இறப்புகள்

Deaths · 19

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.