Skip to content

Popular

September 11 வெள்ளி

On this day · September 11

வரலாற்றில் செப்டம்பர் 11

செப்டம்பர் 11 அன்று நிகழ்ந்த 91 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 51 பிறப்புகள் · 21 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 3

செப்டம்பர் 11 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 51

13ஆம் நூற்றாண்டு

  1. 1226

    முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது.

  2. 1297

    இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1541

    சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது.

  2. 1565

    உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1609

    என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார்.

  2. 1649

    ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

  3. 1683

    வியென்னா சமர்: போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சொபீசுக்கி தலைமையிலான படைகள் துமானியரின் முற்றுகையை முறியடித்தன.

18ஆம் நூற்றாண்டு

  1. 1708

    சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்லசு மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை சிமோலியென்சுக் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். இது பெரும் வடக்குப் போரின் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன. சுவீடன் பேரரசு உலக வல்லமை என்ற நிலையில் இருந்து தாழ்ந்தது.

  2. 1709

    பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.

  3. 1714

    எசுப்பானிய மரபுரிமைப் போர்: காத்தலோனியாவின் தலைநகர் பார்செலோனா எசுப்பானிய மற்றும் பிரெஞ்சு போர்போன் இராணுவத்திடம் சரணடைந்தது.

  4. 1758

    ஏழாண்டுப் போர்: செயிண்ட் காஸ்டு நகர சமரில் பிரான்சு பிரித்தானிய முற்றுகையை முறியடித்தது.

  5. 1777

    அமெரிக்கப் புரட்சிப் போர்: பிராண்டிவைன் சமரில் பிரித்தானியர் பென்சில்வேனியாவில் பெரும் வெற்றி பெற்றனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1802

    பிரான்சு சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.

  2. 1803

    தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.

  3. 1813

    பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.

  4. 1852

    புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

  5. 1857

    ஐக்கிய அமெரிக்கா, யூட்டாவில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.

  6. 1889

    யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.

  7. 1893

    முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

  8. 1897

    எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினார்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    நியூயார்க் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

  2. 1906

    மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.

  3. 1914

    முதலாம் உலகப் போர்: ஆத்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த செருமனியப் படைகளை வெளியேற்றினர்.

  4. 1916

    கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்பாலம் முன்னர் 1907, ஆகத்து 29 இலும் உடைந்தது.

  5. 1919

    ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஒண்டுராசினுள் நுழைந்தனர்.

  6. 1934

    தினமணி நாளிதழ் வெளியிடப்பட்டது.

  7. 1943

    இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கோர்சிகா மற்றும் கொசோவோவைக் கைப்பற்றின.

  8. 1944

    இரண்டாம் உலகப் போர்: மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ஆகனில் இடம்பெற்றது.

  9. 1944

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..

  10. 1945

    இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியப் படைகள் போர்னியோவில் சப்பானியரால் நடத்தப்பட்ட போர்க்கைதிகளின் முகாமைக் கைப்பற்றின.

  11. 1945

    இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.

  12. 1954

    சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

  13. 1965

    இந்திய-பாக்கித்தான் போர்: இந்தியத் தரைப்படை லாகூருக்குத் தென்கிழக்கே பாக்கித்தானின் பார்க்கி நகரைக் கைப்பற்றியது.

  14. 1968

    பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.

  15. 1970

    செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இசுரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

  16. 1973

    சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

  17. 1974

    அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.

  18. 1978

    பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.

  19. 1982

    பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

  20. 1989

    அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு செருமனி அகதிகள் மேற்கு செருமனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.

  21. 1992

    அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.

  22. 1997

    நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.

  23. 1997

    ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இசுக்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.

  24. 1998

    யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் இலங்கைத் தரைப்படையின் யாழ் நகரத் தளபதி சுசாந்த மெண்டிஸ் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2001

    செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

  2. 2005

    காசா கரையில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றும் பணியை இசுரேல் முடித்தது.

  3. 2007

    உருசியா எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை என அழைக்கப்படும் மிகப்பெரும் மரபுசார் ஆயுதத்தைச் சோதித்தது.

  4. 2008

    கால்வாய் சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் சுரங்கப் போக்குவரத்து ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.

  5. 2012

    பாக்கித்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.

  6. 2012

    லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

  7. 2015

    சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.

பிறப்புகள்

Births · 21

இறப்புகள்

Deaths · 16

இம்மாத நாட்கள் · செப்டம்பர்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.