Skip to content

Popular

April 9 வியாழன்

On this day · April 9

வரலாற்றில் ஏப்பிரல் 9

ஏப்பிரல் 9 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 23 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2

ஏப்பிரல் 9 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 33

2ஆம் நூற்றாண்டு

  1. 190

    தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1241

    மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.

  2. 1288

    மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன.

15ஆம் நூற்றாண்டு

  1. 1413

    ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார்.

  2. 1440

    பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1609

    எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

19ஆம் நூற்றாண்டு

  1. 1860

    எதுவார்து-லேயோன் இசுக்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.

  2. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட்டிடம் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1916

    முதலாம் உலகப் போர்: வெர்டன் சமரில், செருமனிப் படைகள் தமது மூன்றாவது தாக்குதலை ஆரம்பித்தன.

  2. 1937

    கமிக்காசு என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே சப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.

  3. 1940

    இரண்டாம் உலகப் போர்: வெசெரியூபங் நடவடிக்கை: டென்மார்க், நோர்வே மீது செருமனி தாக்குதலை ஆரம்பித்தது.

  4. 1940

    விட்குன் குவிசிலிங்கு நோர்வேயின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

  5. 1942

    இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கியது.

  6. 1942

    இரண்டாம் உலகப் போர்: பட்டான் சமர் முடிவுற்றது. சப்பானின் 1-ஆம் வான்படை இந்தியப் பெருங்கடலில் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவின் எர்மெசு என்ற வானூர்தித் தாங்கிக் கப்பல், ஆத்திரேலியாவின் வம்பயர் என்ற போர்க் கப்பல் ஆகியன மூழ்கின.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அட்மிரல் சீர் என்ற போர்க்கப்பல் பிரித்தானிய வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

  8. 1947

    அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கேன்சசு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.

  9. 1948

    எருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் சீயோனிசத் துணை இராணுவக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

  10. 1952

    ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.

  11. 1957

    சூயெசு நெருக்கடி: எகிப்தில், சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

  12. 1957

    இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஏற்றுக் கொண்ட பண்டா–செல்வா ஒப்பந்தத்தை பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து மீளப்பெறுவதாக அறிவித்தார்.

  13. 1959

    மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

  14. 1967

    போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

  15. 1969

    முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

  16. 1984

    யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

  17. 1984

    இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

  18. 1989

    திபிலீசி படுகொலை: ஜோர்ஜியாவில் சோவியத்-எதிர்ப்புப் போராட்டத்தின் போது சோவியத் இராணுவத்தினரால் மக்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

  19. 1991

    ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

  20. 1992

    முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    பக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

  2. 2005

    இளவரசர் சார்லசு கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.

  3. 2009

    சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

  4. 2013

    ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர், 850 பேர் காயமடைந்தனர்.

  5. 2017

    குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்பு: எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள கோப்திக்குத் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

Births · 23

இறப்புகள்

Deaths · 9

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.