Skip to content

Popular

April 16 வியாழன்

On this day · April 16

வரலாற்றில் ஏப்பிரல் 16

ஏப்பிரல் 16 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 22 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2

ஏப்பிரல் 16 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 30

1ஆம் நூற்றாண்டு

  1. 73

    யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

14ஆம் நூற்றாண்டு

  1. 1346

    செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1444

    இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1520

    ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.

  2. 1582

    எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ டி லேர்மா அர்கெந்தீனாவில் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1799

    பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: டாபோர் மலை சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் உதுமானியத் துருக்கியரை யோர்தான் ஆற்றுக்கு அப்பால் விரட்டினான்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1818

    கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

  2. 1853

    இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.

  3. 1862

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் வாசிங்டன், டி. சி.யில் அமுலுக்கு வந்தது.

  4. 1876

    பல்கேரியாவில் உதுமானியப் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.

  5. 1885

    இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1912

    அரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை வானூர்தியில் கடந்த முதல் பெண்ணாக சாதனை படைத்தார்.

  2. 1917

    நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார்.

  3. 1919

    போலந்து-சோவியத் போர்: போலந்து இராணுவம் வில்னியசு நகரை (இன்றைய லித்துவேனியாவில்) கைப்பற்ற வில்னா போர் நடவடிக்கையை ஆரம்பித்தது.

  4. 1919

    அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

  5. 1925

    பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.

  6. 1941

    இரண்டாம் உலகப் போர்: படை நடவடிக்கை 25 ஆரம்பித்ததை அடுத்து, குரோவாசியாவின் ஆட்சியை நாட்சி ஆதரவு "உசுத்தாசே என்ற அமைப்பிடம் அச்சு நாடுகள் ஒப்படைத்தது.

  7. 1943

    ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார்.

  8. 1944

    இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படையினர் பெல்கிரேட் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1,100 பேர் கொல்லப்பட்டனர்.

  9. 1945

    இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை செருமனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.

  10. 1945

    இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற செருமனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.

  11. 1947

    அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.

  12. 1947

    சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பெர்னார்ட் பாருக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.

  13. 1961

    கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.

  14. 1966

    முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

  15. 1972

    நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

  16. 1992

    மொசாம்பிக், மபூட்டோவில் கத்தீனா பி என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 60,000 தொன் பாறை எண்ணெய் கடலில் கரைந்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2007

    ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

  2. 2013

    ஈரான், சீசுத்தான் பலுச்சித்தா மாகாணத்தில் 7.8-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.

  3. 2014

    தென் கொரிய பயணைகள் கப்பல் செவோல் ஜின்டோ தீவில் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

Births · 22

இறப்புகள்

Deaths · 12

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.