Skip to content

Popular

April 30 வியாழன்

On this day · April 30

வரலாற்றில் ஏப்பிரல் 30

ஏப்பிரல் 30 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 5

ஏப்பிரல் 30 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 32

4ஆம் நூற்றாண்டு

  1. 313

    உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

11ஆம் நூற்றாண்டு

  1. 1006

    மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.

15ஆம் நூற்றாண்டு

  1. 1483

    இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை இங்கு இருந்தது.

  2. 1492

    எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.

16ஆம் நூற்றாண்டு

  1. 1513

    ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1636

    எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1789

    நியூயோர்க்கின் வால் ஸ்ட்ரீட், பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து சியார்ச் வாசிங்டன் அமெரிக்காவின் 1வது குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1803

    லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

  2. 1812

    லூசியானா அமெரிக்காவின் 18வது மாநிலமாக இணைந்தது.

  3. 1838

    நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.

  4. 1870

    இலங்கை, புறக்கோட்டையில் முசுலிம்களின் கலவரம் இடம்பெற்றது.

  5. 1897

    ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.

  6. 1900

    அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1937

    பிலிப்பீன்சு பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.

  2. 1945

    இரண்டாம் உலகப் போர்: இட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.

  3. 1945

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.

  4. 1948

    கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.

  5. 1955

    இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.

  6. 1961

    கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

  7. 1975

    வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.

  8. 1980

    யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.

  9. 1980

    இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.

  10. 1982

    திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

  11. 1982

    இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

  12. 1991

    யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

  13. 1993

    உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

  14. 1999

    ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2006

    ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

  2. 2008

    உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

  3. 2009

    நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.

  4. 2012

    இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.

  5. 2013

    நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.

பிறப்புகள்

Births · 17

இறப்புகள்

Deaths · 11

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.