Skip to content

Popular

April 23 வியாழன்

On this day · April 23

வரலாற்றில் ஏப்பிரல் 23

ஏப்பிரல் 23 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 19 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2

ஏப்பிரல் 23 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

11ஆம் நூற்றாண்டு

  1. 1014

    அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார்.

  2. 1016

    எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1343

    எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.

17ஆம் நூற்றாண்டு

  1. 1635

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

  2. 1639

    புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.

  3. 1655

    ஆங்கிலோ-எசுப்பானியப் போரின் போது சாந்தோ தொமிங்கோ மீதான தாக்குதல் ஆரம்பமானது, எனினும் ஏழு நாட்களில் இது தோல்வியடைந்தது.

  4. 1660

    சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

  5. 1661

    இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1815

    உதுமானியப் பேரரசுடன் செர்பியா இணைக்கப்பட்டதை அடுத்து செர்பியர்களின் இரண்டாவது புரட்சி ஆரம்பமானது.

  2. 1867

    சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.

  3. 1879

    நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் கட்டடம் ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்தது.

20ஆம் நூற்றாண்டு

  1. 1905

    யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.

  2. 1932

    நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.

  3. 1940

    மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் உயிரிழந்தனர்.

  4. 1941

    இரண்டாம் உலகப் போர்: செருமனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதென்ஸ் நகரை விட்டு வெளியேறினார்

  5. 1945

    இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு இட்லருக்குத் தந்தி அனுப்பினார்.

  6. 1949

    சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அமைக்கப்பட்டது.

  7. 1966

    முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

  8. 1967

    சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

  9. 1971

    வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.

  10. 1987

    ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  11. 1990

    நமீபியா ஐநாவில் 160-வது உறுப்பு நாடாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50வது உறுப்பு நாடாகவும் சேர்க்கப்பட்டது.

  12. 1993

    இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.

  13. 1993

    இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

  14. 1993

    எரித்திரியாவில் ஐநாவின் கண்காணிப்பில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.

  15. 1997

    அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    முதலாவது யூடியூப் காணொளி "ஜாவெட்" என்பவரால் வெளியிடப்பட்டது.

  2. 2013

    ஈராக்கில் அவீஜா நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 28 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

  3. 2018

    கனடா, தொராண்டோவில் வாகனம் ஒன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 19

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.