Skip to content

Popular

April 6 திங்கள்

On this day · April 6

வரலாற்றில் ஏப்பிரல் 6

ஏப்பிரல் 6 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 13 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1

ஏப்பிரல் 6 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 34

கிமு (பொ.ஊ.மு)

  1. கிமு 648

    ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

12ஆம் நூற்றாண்டு

  1. 1199

    இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.

14ஆம் நூற்றாண்டு

  1. 1385

    போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார்.

15ஆம் நூற்றாண்டு

  1. 1453

    இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார்.

16ஆம் நூற்றாண்டு

  1. 1580

    இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1652

    நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை உருவாக்கினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1712

    நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.

  2. 1782

    தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.

  3. 1793

    பிரெஞ்சுப் புரட்சி: பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு பிரெஞ்சுக் குடியரசின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டு

  1. 1812

    பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.

  2. 1814

    பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

  3. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.

  4. 1869

    செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.

  5. 1895

    ஆஸ்கார் வைல்டு இலண்டனில் கைது செய்யப்பட்டார்.

  6. 1896

    1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

20ஆம் நூற்றாண்டு

  1. 1917

    முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனி மீது போரை அறிவித்தது.

  2. 1919

    மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

  3. 1930

    மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்", என அறிவித்தார்.

  4. 1936

    ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.

  5. 1941

    இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.

  6. 1945

    இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ செருமனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

  7. 1965

    முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.

  8. 1968

    அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.

  9. 1973

    பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

  10. 1979

    நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.

  11. 1984

    கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.

  12. 1992

    பொசுனியப் போர் ஆரம்பமானது.

  13. 1994

    ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.

  14. 1998

    அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாக்கித்தான் சோதித்தது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2005

    குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.

  2. 2009

    இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.

  3. 2010

    இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

  4. 2012

    அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.

  5. 2018

    கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

Births · 13

இறப்புகள்

Deaths · 17

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.