Skip to content

Popular

April 13 திங்கள்

On this day · April 13

வரலாற்றில் ஏப்பிரல் 13

ஏப்பிரல் 13 அன்று நிகழ்ந்த 52 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.

வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 14 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 1

ஏப்பிரல் 13 · சிறப்பு நாட்கள்

வரலாற்று நிகழ்வுகள்

Events · 29

12ஆம் நூற்றாண்டு

  1. 1111

    ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார்.

13ஆம் நூற்றாண்டு

  1. 1204

    கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது.

17ஆம் நூற்றாண்டு

  1. 1605

    உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார்.

18ஆம் நூற்றாண்டு

  1. 1777

    அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டு

  1. 1829

    பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.

  2. 1861

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்டர் கோட்டை கூட்டமைப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

  3. 1865

    அமெரிக்க உள்நாட்டுப் போர்: வட கரொலைனா மாநிலத் தலைநகர் ராலீ அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தது.

  4. 1873

    ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

20ஆம் நூற்றாண்டு

  1. 1919

    ஜலியான்வாலா பாக் படுகொலை: அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.

  2. 1930

    மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை (வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்) தொடங்கப்பட்டது.

  3. 1939

    இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  4. 1941

    சப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.

  5. 1943

    இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக செருமனி அறிவித்தது.

  6. 1944

    நியூசிலாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பண்ணுறவாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  7. 1945

    இரண்டாம் உலகப் போர்: செருமனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர், அரசியல் கைதிகள் நட்சிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

  8. 1945

    இரண்டாம் உலகப் போர்: சோவியத், பல்கேரியப் படையினர் வியென்னா நகரைக் கைப்பற்றினர்.

  9. 1948

    எருசலேமில், அதாசா மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர்.

  10. 1953

    இயன் பிளெமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.

  11. 1954

    காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

  12. 1960

    ஐக்கிய அமெரிக்கா டிரான்சிட் 1-பி என்ற உலகின் முதலாவது செய்மதி இடஞ்சுட்டல் தொகுதியை விண்ணுக்கு ஏவியது.

  13. 1970

    நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.

  14. 1974

    ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.

  15. 1975

    லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

  16. 1976

    பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  17. 1979

    இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

  18. 1987

    மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

  1. 2003

    கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

  2. 2012

    வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.

  3. 2017

    ஆப்கானித்தான், நங்கர்காரில் அமெரிக்கா மிகப்பெரும் வெடிகுண்டை வீசியது.

பிறப்புகள்

Births · 14

இறப்புகள்

Deaths · 8

இம்மாத நாட்கள் · ஏப்பிரல்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.